ஆளுமை:கந்தையா, கதிர்காமத்தம்பி
பெயர் | கந்தையா |
தந்தை | கதிர்காமத்தம்பி |
தாய் | அன்னலக்ஸ்மி |
பிறப்பு | 1916.08.20 |
ஊர் | உடுப்பிட்டி |
வகை | விஞ்ஞானி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தையா, கதிர்காமத்தம்பி (1916.08.20 - ) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த விஞ்ஞானி. இவரது தந்தை கதிர்காமத்தம்பி; தாய் அன்னலக்ஸ்மி. இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியிலும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் சென் ஜோசப் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார். தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் விஞ்ஞான மாணிப் பரீட்சையில் முதலாம் பிரிவில் இவர் சித்தியடைந்துள்ளதோடு லண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி விஞ்ஞான பட்டதாரியாகவும் சித்தியடைந்துள்ளார். கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகத்திலேயே தனது முதுமாணிப் பட்டத்தினையும் கலாநிதி பட்டத்தையும் இவர் பெற்றுக்கொண்டார்.
உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரகசிய வானொலி தகவல் அனுப்பும் முறையொன்றை கண்டுபிடித்த இவருக்கு இங்கிலாந்தின் முடிக்குறிய எலிசெபத் மகாராணியார் 1976இல் இவரை கௌரவிக்கும் வகையில் Officer of the British Empire Medal (OBE) என்ற பட்டத்தை வழங்கியுள்ளார். மேலும் Harwell ஆய்வு கூடத்தைப் போல Rutherford என்ற இடத்திலும் அணுசக்தி ஆய்வு மையம் நிறுவப்பட்டபோது இரு ஆய்வுகூடங்களுக்கும் இவரே தலைவராக செயற்பட்டார். இவரது உழைப்பினால் உருவாகிய உபகரணங்கள் இன்றும் Munich நகரில் உள்ள Max Planck என்ற ஆய்வுகூடத்தில் உள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 11850 பக்கங்கள் 66-67