ஆளுமை:கதிர்காமத்தம்பி, ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:09, 1 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கதிர்காமத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிர்காமத்தம்பி
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1921.06.06
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிர்காமத்தம்பி, ஆறுமுகம் (1921.06.06 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். தமிழ் பால பண்டிதரான இவர் 1948ஆம் ஆண்டு சைவ சமய பாடசாலையை ஆரம்பித்து நடத்தியதோடு விநாயகர் அருள்கூர் சைவநூல் பதிகம் ஒன்றையும் ஆரம்பித்து விநயகர் தலபுராணம், சக்தி சிவனின் அருளாட்சி, விநாயகர் தோத்திரப் பாடல்கள், முத்துமாரி அம்மன் அருளாட்சி, திருவிளையாடற் பூசைப் பாமலர் ஆகிய நூல்களை இலவசமாக வெளியிட்டார். அத்துடன் ஆலயங்களுக்கான தோத்திரப் பதிகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது சேவையைப் பாராட்டி ஆரிய பாஷா விருத்திச் சங்கத்தினர் பாலபண்டிதர் என்ற பட்டத்தையும், சந்நிதியான் ஆச்சிரம நூல் வெளியீட்டு சபையினர் கவிஞர் என்ற பட்டத்தையும், விநாசித்தம்பு புலவர் முதுகலைமாணி என்ற பட்டத்தையும் இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளனர். மேலும் பேராசிரியர் சண்முகதாஸ், பேராசிரியர் கோபாலகிருஷ்ண ஐயர், மாண்புமிகு அமைச்சர் மகேஸ்வரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் இவரை கௌரவித்துள்ளனர்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 06-07