ஆளுமை:கடகம்பேசுவரன், நவரத்தினம்
பெயர் | கடகம்பேசுவரன் |
தந்தை | நவரத்தினம் |
பிறப்பு | 1947.12.10 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கடகம்பேசுவரன், ந. (1947.12.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நவரத்தினம். பண்டிதமணி, ச. பொன்னுத்துரை, இ. நமசிவாயதேசிகர், ந. சுப்பையாப்பிள்ளை, இளமுருகனார், செ.துரைசிங்கம் ஆகியோரிடம் கல்வி கற்ற இவர் 1970 ஆம் ஆண்டிலிருந்து தனது இலக்கியப் பணியை ஆரம்பித்தார்.
வட்டூர் கடம்பன், ஆடல்வல்லான், காப்பியதாசன், வட்டூர்வாணன் ஆகிய புனை பெயர்களில் இவர் ஈழநாடு, ஈழமுரசு, உதயன், முரசொலி, வீரகேசரி, தினக்குரல், தினகரன் போன்ற பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. மேலும் மூலவேர் என்னும் இலக்கிய நூல், பொற்கலசம் என்னும் கட்டுரைத் தொகுப்பு, பொறுப்பனோ யான் என்னும் நாடக நூல், தீந்தேன் என்னும் கவிதைத் தொகுப்பு போன்றவற்றை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். அத்தோடு பெண்மை கொல்லோ பெருமையுடைந்து, வாழ்க்கைப் பயணங்கள், பாவலரும் காவலரும் போன்ற நாடகங்களையும் இவர் மேடையேற்றியுள்ளார்.
ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம், இலங்கை சைவப்புலவர் சங்கம், சைவபரிபாலன சபை, வலயக் கல்வி அலுவலகம் தெல்லிப்பளை, உதயன் பத்திரிகை நிறுவனம் உட்பட பல நிறுவன அமைப்புக்களில் அங்கத்தவராக இருந்து இவர் கலைச் சேவை ஆற்றியுள்ளார்.
1994 ஆம் ஆண்டில் பண்டிதர் பட்டத்தையும், 2001 ஆம் ஆண்டில் வலிகாமம் மேற்குக் கலாச்சாரப் பேரவையின் கலைவாரிதி பட்டத்தினையும் இவர் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 04-05
- நூலக எண்: 16946 பக்கங்கள் 58