ஆளுமை:இராஜலிங்கம், ஶ்ரீ. கே.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:24, 29 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராஜலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | இராஜலிங்கம் |
பிறப்பு | |
ஊர் | புசல்லாவை |
வகை | அரசியல் வாதி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராஜலிங்கம், ஶ்ரீ. கே. மலையகம், புசல்லாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் மலைநாட்டுக் காந்தி என மக்கள் அனைவராலும் அழைக்கப்பட்டார். தோட்டப் பாடசாலையிலும், கம்பளை அன்றூசிலும், கண்டி சென் அந்தனிசிலும் இவர் கல்வி கற்றார்.
சில நண்பர்களுடன் இணைந்து இலங்கை இந்திய வாலிபர் சங்கத்தை உருவாக்கிய இவர் அதன் மூலம் சூரியமல் என்ற இயக்கத்திலும் பங்குபற்றினார். மேலும் மலையக சமூகத்தின் கல்வி வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு புசல்லாவை பகுதியில் சரஸ்வதி வித்தியாலயத்தையும் நிறுவினார். 1947ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பிரவேசித்த இவரை 1949இல் ஆசிய விவசாயக் கமிட்டியின் ஆலோசகராக சர்வதேச தொழில் ஸ்தாபனம் நியமித்தது.
வளங்கள்
- நூலக எண்: 7652 பக்கங்கள் 40-44