ஆளுமை:இராசையா, ஆசை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசையா, ஆசை
தந்தை ஆசை
தாய் செல்லம்மா
பிறப்பு 1946.08.16
ஊர் அச்சுவேலி
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசையா, ஆசை (1946.08.16 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். இவரது தந்தை ஆசை; தாய் செல்லம்மா. அச்சுவேலி மத்திய கல்லூரியின் கல்வி கற்ற இவர் கொழும்பு நுண்கலைக்கல்லூரியில் (College of Art and Craft) 1966 தொடக்கம் 1969 வரையான காலப்பகுதியில் ஓவிய நுட்பங்களைப் பயின்றார். பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் வருகை விரிவுரையாளராகப் கடமையாற்றினார்.

இவர் நூல்களின் வடிவமைப்பாளராகவும் அட்டைப்பட ஓவியராகவும் நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் திகழ்ந்தார். இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவராவார். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார். சேர். பொன். இராமநாதன், சேர். பொன். அருணாசலம், சேர். வைத்திலிங்கம் துரைசுவாமி, சேர். ஜோன் கொத்தலாவல, ஜோர்ஜ் ஈ. டி. சில்வா, ஈ. பி. மல்லசேகரா ஆகியோரின் மெய்யுரு ஓவியங்களும் தவலம் என்ற மலையகப் போக்குவரத்து மார்க்கமும் இலங்கையின் முதற் புகைவண்டி ஓவியமும் இவர் வரைந்த முத்திரை ஓவியங்களாகும்.

கலைஞானச் சுடர் விருது, வடமாகாண ஆளுநர் விருது, கலாபூஷணம் விருது, கொழும்புத் தமிழ்ச் சங்க விருது, ஞானம் சஞ்சிகை விருது, ஓவியர் கிக்கோ தமிழியல் விருது, கலைஞானபூரணன் விருது, அச்சூர்க்குரிசில் விருது ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 193
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 145-149
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 236-237
  • நூலக எண்: 13171 பக்கங்கள் 05-06
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இராசையா,_ஆசை&oldid=178831" இருந்து மீள்விக்கப்பட்டது