ஆளுமை:இராசேந்திரன், கனகசபை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசேந்திரன்
தந்தை கனகசபை
பிறப்பு 1958.03.20
ஊர் மானிப்பாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசேந்திரன், கனகசபை (1958.03.20 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை கனகசபை. படம் வரைதல், மண்ணினால் மிருகப் பொம்மைகள் செய்தல் போன்றனவற்றில் இவர் திறமை கொண்டு காணப்பட்டார்.

கதிர்காம முருகன், நவாலி அட்டகிரி, நவாலி தம்பளை மாரியம்மன், சுதுமலை சிவன் ஆலயம், கோண்டாவில், ஏழாலை, நீர்வேலி, அச்சுவேலி, தெல்லிப்பளை ஆகிய இடங்களில் இவர் தனது சிற்ப சேவையை ஆற்றியுள்ளார்.

2003இல் கோண்டாவில் குமரகோட்டம் ஆலயத்தினால் கலா வித்தகர், கோண்டாவில் ஶ்ரீ தில்லைக்காளியம்பாள் தேவஸ்தானத்தினால் கலாஜோதி, 2004இல் கோண்டாவில் வடக்கு மாவடி பதியுரை அருள்மிகு ஶ்ரீ வீரபத்திரர் தேவஸ்தானத்தினால் சிற்ப கலாமணி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 235-236