ஆளுமை:ஆறுமுகநாதன், எஸ். ஏ.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:55, 10 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஆறுமுகநாதன் |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆறுமுகநாதன், எஸ். ஏ. யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த கல்வியியலாளர். இவர் எஸ். ஏ. நர்தன் என்ற பெயரால் பலராலும் அறியப்பட்டார். இவர் மலாயாவில் பத்திரிகை ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் சொந்த ஊராகிய காரைநகருக்கு வந்து ஆசிரியராகப் பணி புரிந்தார்.
மணிவாசகர் சபையுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த இவர் அதன் ஆண்டுவிழாக்களில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் தலைமை வகித்தவர். இச் சபையின் முன்னேற்றம் கருதி இவர் செய்த சேவைகள் சபையுடன் மேலும் இவரை ஐக்கியப்படுத்திக் கொண்டது.
ரைம்ஸ் ஒவ் மலாயா என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு உப ஆசிரியராகவும், சென்னை இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்தவர். "SAN" என்ற பெயருடன் பத்திரிகைகளில் இவர் பல கட்டுரைகளை எழுதி உள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 316