ஆளுமை:அழகேசன், ஆறுமுகம்
பெயர் | அழகேசன் |
தந்தை | ஆறுமுகம் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அழகேசன், ஆறுமுகம் ஓர் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். சிங்களமொழியில் பாண்டித்தியம் பெற்ற இவர் 25 சிங்களப் படங்களுக்கு மேல் கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும் 22 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு உதவி இயக்குனராகவும் கடமையாற்றியுள்ளார். ஆரம்பக் காலங்களில் மேடையில் உதவி இயக்குனராக விளங்கிய இவர், பின் லெனின் மொறாயஸ், எம். எஸ். ஆனந்தன், எம். வி. பாலன், காமினி பொன்சேகா போன்றோரின் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராகக் கடமையாற்றியதன் மூலம் சினிமா உலகில் பிரவேசித்தார்.
1964 ஆம் ஆண்டு சித்தக மஹிம (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்துக்கே இவர் முதலில் கதை வசனம் எழுதினார். மேலும் மேடை நடிகராக இவர் இருந்த காலங்களில் இளவரசன், துர்கேஸ் நந்தினி, தியாகச் சின்னம், யாருக்காக அழுதான், வாடகைக்கு அறை ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். அடுத்து பிரபல திரைப்பட இயக்குனரான எம். வி. பாலன் இயக்கிய ஹித்த ஹொந்த கேணி (நல்லிதயம் படைத்த பெண்), தெய்யனே சத்ய சுரகின்ன (தெய்வமே உண்மையைக் காப்பாற்று) போன்ற படங்களுக்கு இவர் திரைக்கதை வசனம் எழுதியிருக்கின்றார். சுவர்ணவாஹினி என்னும் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்க அந் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவுக்குப் பொறுப்பாளராக இவர் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 205-210