ஆளுமை:அருளானந்தம், அந்தோணிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:08, 5 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அருளானந்தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளானந்தம்
தந்தை அந்தோணிப்பிள்ளை
பிறப்பு 1948.07.13
ஊர் மாரீசன் கூடல்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளானந்தம், அந்தோணிப்பிள்ளை (1948.07.13 - ) யாழ்ப்பாணம், மாரீசன்கூடலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அந்தோணிப்பிள்ளை. நாடகம், நாட்டுக்கூத்து போன்ற துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் 1966இல் தனது கலைப்பயணத்தினை ஆரம்பித்தார்.

அனேகமாக பெண்பாத்திரம் ஏற்று நடித்துள்ள இவர் சகோதரபாசம், அரிச்சந்திரா, புரட்சித்துறவி, உத்தரியத்தின் மகிமை போன்ற பல நாட்டுக்கூத்துக்களிலும் அடிமைப்பெண், காதல் படுத்தும்பாடு, இறைவன் இட்ட கட்டளை, தியாகச் செம்மல் ஆகிய நாடகங்களிலும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 125-126