ஆளுமை:அருட்பிரகாசம், முடியப்பு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:23, 5 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அருட்பிரகாசம் |
தந்தை | முடியப்பு |
பிறப்பு | 1944.10.07 |
ஊர் | பாஷையூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அருட்பிரகாசம், முடியப்பு (1944.10.07 - ) யாழ்ப்பாணம் பாஷையூரைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நாட்டுக்கூத்துக் கலைஞர். இவரது தந்தை முடியப்பு. நாட்டுக்கூத்து, இசை நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்க இவர் நடித்தல், நட்டுவாங்கம் செய்தல், நாட்டுக் கூத்து, இசை நாடகங்கள் எழுதுதல் போன்ற செயற்பாடுகளில் முன்னிலை வகித்து வந்தார்.
தனது எட்டாவது வயதில் நாட்டுகூத்தினில் நடிக்கத் தொடங்கிய இவர் 'அருள்' நாடக மன்றத்தை நிறுவி அதன் மூலம் பல வெற்றி நாடகங்களை மேடையேற்றியுள்ளார். பண்டார வன்னியன், தியாக ராகங்கள், சங்கிலியன் போன்றன இவரால் எழுதப்பட்ட நாட்டுக்கூத்து நூல்களாகும். இவர் எழுதிய மண்ணின் மைந்தர்கள் என்னும் நாட்டுக்கூத்து நாடகநூல் 2006ஆம் ஆண்டிற்கான இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 166
- நூலக எண்: 15444 பக்கங்கள் 124-125