ஆளுமை:கதிரேசர்பிள்ளை, செல்லையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரேசர்பிள்ளை
தாய் -
பிறப்பு 1921
இறப்பு 1991
ஊர் அளவெட்டி
வகை கவிஞர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரேசர்பிள்ளை, செ. (1921 - 1991) அளவெட்டியைச் சேர்ந்த கவிஞர்; ஆசிரியர். இவர் அளவெட்டி சீனன் கலட்டி ஞானோதய வித்தியாசாலையிலும் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் கல்விகற்றார். ஆசிரியப் பணியினைத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் தொடங்கி ஓய்வு வரைஅங்கேயே பணிபுரிந்தார்.

சொற்பொழிவு, நாடகம், புராணபடனம் போன்றவற்றிலும் ஈடுபட்டார். இவரது நாடகங்கள் பாரதம் தந்த பரிசு (1980) என்ற நூலாக வெளிவந்துள்ளன. இவர் தனது தாயின் நினைவாக 'தாய்' என்றொரு நூலை வெளியிட்டுள்ளார். சமயக்கடவுளர் மீது பதிகங்கள், இரட்டை மணி மாலை, திருப்பள்ளியெழுச்சி, திருத்தல வெண்பா, ஊஞ்சல் முதலான பாடல்கள் இயற்றியுள்ளார். வரத்தலம் கற்பக விநாயகர் இரட்டை மணி மாலை, தவளக்கிரி முத்துமாரியம்மை திருப்பள்ளியெழுச்சி, வீரகத்தி விநாயகர் திருத்தல வெண்பா போன்றவை அத்தகையவை. இவர் பாடிய கவிதைகள் கதிரேசன் கவிதைகள் என்ற நூலாக வெளிவந்துள்ளன.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 7478 பக்கங்கள் 66-78