தொலைவில்
தொலைவில் | |
---|---|
நூலக எண் | 345 |
ஆசிரியர் | வாசுதேவன், K. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | காலச்சுவடு |
வெளியீட்டாண்டு | 2006 |
பக்கங்கள் | 103 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல்விபரம்
யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணையில் 1962இல் பிறந்த வாசுதேவன் தற்போது பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகிறார். தனது பதினேழு வயதில் ஊரைவிட்டும், இருபத்தியிரண்டு வயதில் நாட்டைவிட்டும் புறப்பட்ட ஒரு ஈழத்துக் கவிஞனின் அலைதலுக்கூடான வாழ்வனுபவங்கள் இத்தொகுப்பில் கவிதைகளாகியுள்ளன. அவ்வகையில் தாயகங்களுக்கு அப்பால் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூக மனிதனின் ஆன்மாவை, அவனது தொனியை இக்கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன. கே.வாசுதேவனின் முதலாவது கவிதைத் தொகுதி இதுவாகும்.
பதிப்பு விபரம்
தொலைவில். வாசுதேவன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு ஏப்ரல் 2006. (சென்னை 600 005: மணி ஆப்செட்)
103 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 22 *13.5 சமீ., ISBN: 81-89359-30-4.
-நூல் தேட்டம் (3465)