ஆளுமை:அடைக்கலமுத்து, சூசை
பெயர் | அடைக்கலமுத்து |
தந்தை | சூசை |
பிறப்பு | 1932.04.28 |
ஊர் | கரம்பன் |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அடைக்கலமுத்து, சூசை (1932.04.28 - ) யழ்ப்பாணம் கரம்பனைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். இவரது தந்தை சூசை. சிறுவயதிலிருந்தே ஓவியத் துறையில் தீவிர நாட்டங்களைக் கொண்டமையால் இத் துறையை முறையாக கற்றுத் தேர்ச்சிப் பெற்றார்.
நாடக அரங்குகளில் பின்புலக் கலைஞராகவும் செயற்பட்டுவரும் இக் கலைஞர் காட்சியமைப்புக்களை மிக நுட்பமாக கையாண்டு நாடக வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். ஈழத்தில் முன்னணி மன்றமாக இயங்கிவரும் திருமறைக் கலாமன்றத்தில் 1960ஆம் ஆண்டு முதல் இணைந்து ஓவியக் கலைப் பணியாற்றி வரும் இவர் அம்மன்றத்தின் கலைப்பணியில் உந்து சக்தியாக இருந்து பிரமாண்டமான நாடக நிகழ்வுகளுக்கு பெரும் காட்சிகளை வரைந்தும், அமைத்தும் அந்நிகழ்வுகளின் பெரு வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். எழுத்தோவியம், வர்ணக்கலை ஓவியம், ஆலயங்களின் சுவர் சித்திரம், வர்ணம் பூசுதல் போன்ற வேலைகளை ஒப்பந்த அடிப்படையிலும் செய்து வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 189
- நூலக எண்: 15444 பக்கங்கள் 232