ஆளுமை:அகிலன், வேலாயுதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:19, 21 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அகிலன்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகிலன்
தந்தை வேலாயுதன்
பிறப்பு
ஊர் வதிரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகிலன், வேலாயுதன் யாழ்ப்பாணம், வதிரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலாயுதன். இவர் யாழ்ப்பாணம் கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று கலைமாணிப் பட்டப்படிப்பை நிறைவு செய்து கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சி கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக தகமை பெற்றுள்ளார்.

கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளில் எழுதி வரும் இவரது படைப்புக்கள் வலம்புரி, சங்குநாதம், உதயன், சுடரொளி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. 2001இல் இரத்தினமாலை என்ற கட்டுரைத் தொகுப்பினையும், 2004இல் கவிவானம் பொழிகிறது என்ற கவிதைத் தொகுப்பினையும் சொல்லாத சோகங்கள் என்ற நெடுங்கவிதைத் தொடர் ஒன்றினையும் இவர் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3224 பக்கங்கள் 26