ஆளுமை:செந்திநாத ஐயர், சிந்நய ஐயர்
பெயர் | செந்திநாத ஐயர், சிந்நயஐயர் |
தந்தை | சிந்நயஐயர் |
பிறப்பு | 1848.10.02 |
இறப்பு | 1924.05.05 |
ஊர் | ஏழாலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செந்திநாத ஐயர் (1848.10.02 - 1924.05.05) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிந்நயஐயர். புன்னாலைக்கட்டுவன் கதிர்காமையரிடத்தில் தமிழையும் சைவத்தையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆங்கிலக்கல்வியையும் கற்றுத் தேர்ந்தார். 1872ஆம் ஆண்டில் வண்ணார்பண்ணை ஆங்கில வித்தியாசாலையிலும், 1882இல் இந்தியாவில் திருநெல்வேலியிலுள்ள சைவப்பாடசாலையிலும் ஆசிரியராக பணியாற்றினார். 1883இல் 'கஜனமனோரஞ்சனி' என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். 1888 முதல் 1898ஆம் ஆண்டுவரை காசியில் வசித்துவந்தமையால் காசிவாசி செந்திநாதையர் என அழைக்கப்பட்டார்.
வேதாகம நூல்களிலும் தமிழ் நூல்களிலும் ஆழ்ந்த புலமை கொண்ட இவர் அத்வைத வேதாந்தமும் விசிட்டாத்வைதமும் ஒரேயொரு பிரம சூத்திரத்துக்கு இருவேறு விளக்கங்களை எப்படிக் காண முடியும் என எண்ணி அதனை விளக்குவதாக இவர் நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை எழுதியுள்ளார். பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம் (மொழிபெயர்ப்பு), கந்தபுராண நவநீதம், சிவஞானபோத வசனாலங்காரதீபம், சைவ வேதாந்தம், தேவாரம் வேதசாரம் போன்ற நூல்களை எழுதியுள்ள இவருக்கு 'சித்தாந்த சிகாமணி', 'சித்தாந்த பானு' போன்ற பட்டங்களைத் தமிழகம் அளித்து அவரின் சைவப்பணிகளை ஊக்குவித்தது.
வளங்கள்
- நூலக எண்: 98 பக்கங்கள் 01-39
- நூலக எண்: 3003 பக்கங்கள் 164-176
- நூலக எண்: 963 பக்கங்கள் 132-135