ஆளுமை:செல்லத்துரை, இளையதம்பி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:01, 3 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | செல்லத்துரை |
தந்தை | இளையதம்பி |
பிறப்பு | 1927.06.03 |
ஊர் | சிறுப்பிட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லத்துரை, இளையதம்பி (1927.06.03 - ) யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி. தனது ஆரம்பக் கல்வியை சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், உயர் கல்வியை புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியிலும் கற்று இவர் எழுதுவினைஞனாகவும் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். பின்னர் 1960ஆம் ஆண்டில் இலங்கை சைவப்புலவர் சங்கத்தில் சைவப்புலவர் பரீட்சை காரியதரிசியாகவும் இவர் நியமிக்கப்பட்டார்.
இவர் திருவருட்பயன் வினா விடை, உண்மை விளக்கம் மூலமும் உரையும், கொடிக்கவி விளக்க உரையுடன் வினா வெண்பா மூலமும் உரையும், உண்மை நெறி விளக்கம் மூலமும் உரையும், திருவுந்தியார் மூலமும் உரையும் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 1957ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த பண்டிதராகவும், 1959ஆம் ஆண்டில் சைவப்புலவராகவும் இவர் பட்டம் பெற்றுள்ளர்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 24