ஆளுமை:ஸதக்கா, ஏ. ஜி. எம்.
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:31, 3 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஸதக்கா, ஏ. ஜி. எம். |
பிறப்பு | |
இறப்பு | 2011.08.20 |
ஊர் | வாழைச்சேனை |
வகை | கவிஞர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஸதக்கா, ஏ. ஜி. எம். ( - 2011.08.20) இலங்கையின் கிழக்கு மாகாணம் வாழைச்சேனையைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமாவார். பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியரான இவர் இளந்தளிர், மின்னல், அந்நஜா, The Post ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும், யாத்ரா சஞ்சிகையின் துணையாசிரியராகவும் பணியாற்றியவராவார்.
இவர் இமைக்குள் ஓர் இதயம், போர்க்காலப் பாடல்கள் முதலிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் 1999இல் சென்னையில் இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தை ஸ்தாபித்தவர். 2002ல் கொழும்பில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் முக்கிய பங்கு வகித்த ஸதக்கா அம்மாநாட்டில் வெளியிட்ட "மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்" எனும் கவிதைத் தொகுதியின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராவார். இவர் லேக்ஹவுஸ் பத்திரிகையில் கல்குடா பிராந்திய செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 16541 பக்கங்கள் 31