ஆளுமை:செல்வநாயகம், வினாசித்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வநாயகம்
தந்தை வினாசித்தம்பி
தாய் அலங்காரம்
பிறப்பு 1907.01.11
ஊர் கொழும்புத்துறை
வகை கல்வியியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வநாயகம், வினாசித்தம்பி (1907.01.11 - ) யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த கல்வியியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை வினாசித்தம்பி; தாய் அலங்காரம். இவர் தனது ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியில் கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியிலே சேர்ந்து படித்து, லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பரீட்சைகளில் தேறிக் கலைமாணிப் பட்டம் பெற்றார். பின்னர் இடைக்காடு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். 1924ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் முதுமாணிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டர்.

இவர் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் உரைநடை வரலாறு முதலான ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய சிலப்பதிகாரம், மணிமேகலையின் காலம் என்ற கட்டுரை யூனுவசிற்றி ஒஃப் சிலோன் றிவியூ என்ற சஞ்சிகையில் 1948ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மலேசியாவில் 1966இல் நடைபெற்ற முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் தொல்காப்பிய ஆராய்சியில் தோன்றும் சில பிரச்சினைகள் என்ற ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்திருந்தார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 22-27
  • நூலக எண்: 3783 பக்கங்கள் 01-20
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 12-14