ஆளுமை:கணபதிப்பிள்ளை, கந்தசுவாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிப்பிள்ளை
தந்தை கந்தசுவாமி
பிறப்பு 1903
இறப்பு 1968
ஊர் பருத்தித்துறை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, கந்தசுவாமி (1903 - 1968) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கந்தசுவாமி. இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் கலைமாணிப் பட்டத் தேர்விற்கு தோற்றி முதற் பிரிவில் சித்திப் பெற்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்தரிடமும் சோழவந்தான் கந்தசாமியிடமும் கற்று வித்துவான் தகுதியைப் பெற்றார். தொடர்ந்து இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு மாற்றப்பட்டபோது இவர் அதன் கீழைத்தேய மொழிப் பீடத்தின் தலைவராக கடமையாற்றியுள்ளார்.

கல்வெட்டியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு தமிழியலுக்கு வளம் சேர்ந்த இவர் கல்வெட்டியல் பயில்நெறியை பல்கலைக்கழகத்தில் மாணவருக்கு சிறந்த முறையில் கற்பித்து வந்தார். மேலும் மங்கணாய், பாண்டுவஸ்நுவர தமிழ் கல்வெட்டுக்கள பற்றிய ஆய்வில் ஈடுபட்டு இவர் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நாடகத்துறையிலும் நானாடகம், சங்கிலி, மாணிக்கமாலை ஆகிய நாடக நூல்ககளை இவர் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 206-216
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 07-09