ஆளுமை:குமாரசாமி, ஆழ்வாப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:45, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குமாரசாமி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசாமி
தந்தை ஆழ்வாப்பிள்ளை
பிறப்பு 1926
ஊர் கட்டைவேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசாமி, ஆழ்வாப்பிள்ளை (1926 - ) யாழ்ப்பாணம், கட்டைவேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை ஆழ்வாப்பிள்ளை. இவர் ஆர்மோனியம், பிற்பாட்டு போன்ற கலைகளை கல்வியங்காடு புவனம் ஐயா அவர்களிடம் முறைப்படி கற்று தனது 14ஆவது வயதிலிருந்து கலைச்சேவை ஆற்றி வந்துள்ளார். தனது 5ஆவது வயதிலிருந்து கண்பார்வையை இழந்துள்ள இவர் ஆர்மோனியக் கலையை கற்று அக் கலையில் தேர்ச்சியடைந்துள்ளர். இவர் இக் கலையை தனது 19ஆவது வயதிலிருந்து மேடையேற்றி வருவதோடு பிற்பாடு பாடியும் வந்துள்ளார். இவரது திறமைக்காக 2002ஆம் ஆண்டில் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு கலைஞான கேசரி எனும் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 108