ஆளுமை:சிதம்பரநாதன், மாரிமுத்து
பெயர் | சிதம்பரநாதன் |
தந்தை | மாரிமுத்து |
பிறப்பு | 1946.07.18 |
ஊர் | சுழிபுரம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிதம்பரநாதன், மாரிமுத்து (1946.07.18 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை மாரிமுத்து. தனது 09ஆவது வயதிலிருந்து எஸ். சுப்பையாபிள்ளை, ஏ. எஸ். இராமநாதன் போன்ற ஆசான்களிடம் தனது மிருதங்க கலையைப் பயின்று 1985ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார்.
ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள கலைமன்றங்களிலும் கோயில்களிலும் சுவிற்சலாந்து, ஐரோப்பா நாடுகளிலும் இலங்கை வானொலி, ரூபவாகினி கூட்டுத்தாபனம், டான் தமிழ் ஒலி போன்றவற்றிலும் இவர் தனது மிருதங்க கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
இவரது சேவைக்காக 2001ஆம் ஆண்டில் மகாவித்துவான் வீரமணி ஐயரால் தண்ணுமை வேந்தன் என்ற பட்டமும், வலிகாமம் மேற்கு கலாசாரப் பேரவையால் மிருதங்க கலைவாரிதி என்னும் பட்டமும், இராமநாதன் நுண்கலைக்கழகத்தினால் சங்கீத ரத்னம் என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் 2007இல் மிருதங்க கலைக்கு கடந்த 40 ஆண்டுகளாக ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் வடமாகாண கல்வி அமைச்சினால் ஆளுநர் விருதும், 2008இல் கலாபூஷணம் விருதும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 102-103