ஆளுமை:நடேசன், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:26, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நடேசன்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடேசன்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1920.12.20
ஊர் நீர்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடேசன், வேலுப்பிள்ளை (1920.12.20 - ) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியிலும், உயர் கல்வியை கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியிலும் கற்றார். பின் கர்நாடக இசையில் இவர் கொண்ட ஆர்வத்தினால் தமிழ்நாடு சென்று அங்கு பழனி சுப்பிரமணியம்பிள்ளை, இராமநாதபுரம் கிருஸ்ணன், இராமநாதபுரம் முரகபூபதி ஆகியோரிடம் கற்றார்.

1948ஆம் ஆண்டில் இலங்கை திரும்பிய இவர் யாழ்ப்பாணம் வண்ணார் நாவலர் பாடசாலையில் இசையாசிரியராக தம் பணியைத் தொடங்கி பின்னர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு இசையாசிரியராக இடமாற்றம் செய்யப்படு 31 ஆண்டுகள் சேவையாற்றினார். மேலும் 1985ஆம் ஆண்டு சாவகச்சேரி மன்றம் ஒன்றை அமைத்து இசை வகுப்புக்களையும், இசை விழாக்களையும் நடத்தினார்.

இவருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினால் இசைமணி எனும் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 72