ஆளுமை:கருணாகரன், கந்தவனம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:31, 7 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:கருணாகரன், ஏ. கே., ஆளுமை:கருணாகரன், கந்தவனம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கருணாகரன்
தந்தை கந்தவனம்
பிறப்பு 1945.12.05
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கருணாகரன், கந்தவனம் (1945.12.05 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தவனம். இவர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றபொழுதே 6ஆம் வகுப்பில் கர்நாடக இசையில் பயிற்சி பெற ஆரம்பித்தார். 1961இல் யாழ்ப்பாணம் இராமநாதன் இசைக்கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்று சங்கீதரத்தினம் எனும் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் கற்று, சங்கீத வித்துவான், மற்றும் இசை கற்பிப்பதில் டிப்ளோமா பட்டமும் பெற்றார். இராமநாதன் இசைக்கல்லூரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டபோது, 1979ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் போதனாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் இசை விரிவுரையாளராக நான்கு ஆண்டுகள் பணி புரிந்து மீண்டும் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் 2011 முதல் இசை விரிவுரையாளராக கடமையாற்றினார்.

1969ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றினார். சிறிது காலத்தின் பின் அவர் அங்கு தமிழ் சேவையின் வாத்தியக் குழுவின் தலைவராகப் பணி உயர்வு பெற்றார். கருணாகரன் கர்நாடக இசையில் இளங்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஆலாபனா எனும் சங்கீத சபாவை கொழும்பில் நடாத்தி வருகின்றார். இவர் எழுதிய "சங்கீதானுபவம்" என்ற நூல் 2011 ஜூன் மாதம் கொழும்பில் வெளியிடப்பட்டது.

இவர் தேசநேத்ரு விருது, வடமாகாண முதலமைச்சர் விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 174-177
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 56-57