ஆளுமை:கணபதிப்பிள்ளை, சுப்பையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிப்பிள்ளை
தந்தை சுப்பையா
பிறப்பு 1939.10.16
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சுப்பையா கணபதிப்பிள்ளை (பி.1939, ஒக்டோபர் 16) ஓர் இசைக்கலைஞர் ஆவார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சங்கீதம் பயின்று முதல் பிரிவில் சித்தியடைந்து சங்கீதபூஷணம் பட்டத்தை பெற்றார். இவர் இசை ஆசிரியராகவும் சங்கீத வட்டார கல்வி அதிகாரியாகவும் பிரதி இசைக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். பல இசை அரங்கேற்றங்களையும் முன்னின்று நடாத்தியிருக்கும் இவர் வட இலங்கை சங்கீதசபையின் உபதலைவராகவும் பணியாற்றியிருப்பதோடு இலங்கையில் நடைபெற்ற பல இசைவிழாக்களிலும் கலைவிழாக்களிலும் வாய்ப்பாட்டு கலைஞராக மிளிர்ந்தவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 556
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 55-56