ஆளுமை:கதிரேசர்பிள்ளை, செல்லையா
பெயர் | கதிரேசர்பிள்ளை |
தாய் | - |
பிறப்பு | 1921 |
இறப்பு | 1991 |
ஊர் | அளவெட்டி |
வகை | கவிஞர், கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கதிரேசர்பிள்ளை, செ. (1921 - 1991) அளவெட்டியைச் சேர்ந்த கவிஞர்; கல்வியியலாளர். இவர் அளவெட்டி சீனன் கலட்டி ஞானோதய வித்தியாசாலையிற் கல்வி கற்றவர். கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் கற்று பரீட்சையிலும் முதலிடம் பெற்றார். தமது கல்விப் பணியைத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் ஆரம்பித்து ஓய்வு பெறும் வரையும் அங்கேயே பணிபுரிந்தார்.
இவர் கலைத்துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். சொற்பொழிவு, நாடகம், புராணபடனம், கவிதையியற்றல் முதலான பல்துறையிலும் சிறந்து விளங்கினார். இவரது நாடகங்கள் ‘பாரதந் தந்த பரிசு’ என்னும் பெயரில் 1980ம் ஆண்டு நூலுருவில் வெளிவந்துள்ளது. இவர் தனது தாயின் நினைவாக 'தாய்' என்றொரு நூலை வெளியிட்டுள்ளார்.
தெய்வபக்தி கொண்டவரான இவர் தெய்வங்களின் மேல் பதிகங்கள், இரட்டை மணி மாலை, திருப்பள்ளியெழுச்சி, திருத்தல வெண்பா, ஊஞ்சல் முதலான நூல்களை இயற்றியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் வரத்தலம் கற்பக விநாயகர் இரட்டை மணி மாலை, தவளக்கிரி முத்துமாரியம்மை திருப்பள்ளியெழுச்சி, வீரகத்தி விநாயகர் திருத்தல வெண்பா என்பனவும் அடங்கும். இவர் பாடிய கவிதைகள் அடங்கிய நூலொன்று கதிரேசன் கவிதைகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 7478 பக்கங்கள் 66-78