ஆளுமை:ஷரிபுத்தீன், ஆதாம்பாவா மரைக்கார்
பெயர் | ஷரிபுத்தீன், ஆ. மு. |
பிறப்பு | 1909.05.04 |
ஊர் | அம்பாறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஷரிபுத்தீன் (பி. 1909, மே 04) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவர் மருதானை அரசினர் தமிழ் பாடசலையில் கற்று மாணவ ஆசிரியர் பரீட்சையிலும், ஆசிரியர் பரீட்சையிலும் தேறி ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியதோடு சமாதான நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். ஆசிரியப் பணியின் போது பாடசாலையின் தேவைக்காக மேடை நாடகங்கள் எழுதி நெறிப்படுத்தியதோடு மரபு சார்ந்த ஓவியக் கலையிலும் வல்லவராக திகழ்ந்தார். இவரால் உரைச் சித்திரமாக வடிவமைக்கப்பட்ட மட்டக்களப்பு நாட்டுக் கவி 1951 மார்கழியில் இலங்கை வனொலி கலையகத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
சீறா பதுறுப் படல உரை, சீறா பாதை போன்ற பாடல்கள் உரை, புது குஷ்ஷாம் உரை என்பன இவர் செய்த உரைகளாகும். சாகித்திய மண்டலப் பரிசு, இலக்கிய மாமணி விருது, 'நூருல் பண்ணான்' 'கலை ஒளி' ஆகிய விருதுகளையும், பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1672 பக்கங்கள் 42-47
- நூலக எண்: 10330 பக்கங்கள் 24-25
- நூலக எண்: 4293 பக்கங்கள் 97-98