ஆளுமை:கனிவுமதி, சந்திரசேகரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 10 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கனிவுமதி, ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனிவுமதி, சந்திரசேகரம்
தந்தை சந்திரசேகரம்
தாய் ஜெயலட்சுமி
பிறப்பு 1977.12.13
ஊர் கண்டி
வகை எழுத்தாளர், ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ச. கனிவுமதி (1977.12.13 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சந்திரசேகரம், தாய் ஜெயலட்சுமி. இவர் கண்டி ஆகலை தமிழ் வித்தியாலயம், கொழும்பு முகத்துவாரம் இந்துக் கல்லூரி, ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார். மலையகத்தின் புதிய தலைமுறையின் முக்கியமான கவிஞர் கனிவுமதி என்று பல மூத்த இலக்கியவதிகளால் குறிப்பிட்டு பேசப்படும் இவர் கல்லூரி காலங்களில் தானா வீசும் காற்று என்ற கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

திரு. வீரசந்தானம் அவர்களை தனது மானசீக குருவாகக் கொண்டு பல ஓவியங்களை இவர் வரைந்துள்தோடு 20க்கும் மேற்பட்ட இசைப் படல்களையும் எழுதியுள்ளார். அப்புறமென்ன, கட்டாந்தரை போன்ற நூல்களை வெளியிட்டிருக்கும் இவருக்கு பல அமைப்புக்களிடமிருந்து ஶ்ரீகவி, மக்கள் தென்றல், மக்கள் கவி, கவிக்குயில் போன்ற பட்டங்க்ளும் கௌரவங்களும் கிடைத்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 111-119