ஆளுமை:விசுவநாதபிள்ளை, வைரவநாதபிள்ளை
பெயர் | விசுவநாதபிள்ளை, வைரவநாதபிள்ளை |
தந்தை | வைரவநாதபிள்ளை |
பிறப்பு | 1820 |
இறப்பு | 1880 |
ஊர் | சுதுமலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வை. விசுவநாதபிள்ளை (1820 - 1880) யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைரவநாதபிள்ளை. இவர் இளமையில் வைரவநாத உபத்தியாரிடம் தமிழும், கங்கபட்டர் அவர்களிடம் சமஸ்கிருதமும் கற்றார். 1832ஆம் ஆண்டிலே இவர் வட்டுக்கோட்டை செமினரியிற் சேர்ந்து கல்வி கற்று பின் தாம் கல்வி பயின்ற கல்லூரியிலே சில காலம் ஆசிரியரக பணியாற்றியதோடு, உதயதாரகை என்னும் பத்திரிகையின் ஆசிரியரகவும் பணியாற்றினார்.
இந்தியாவுக்குச் சென்ற இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து பி.ஏ. பரீட்சையில் சித்தி பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தினர் முதன் முதலாக நடத்திய அப்பரீட்சையில் சித்திப்பெற்ற இரு யாழ்ப்பாணத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில - தமிழ் அகராதி, வீச கணிதம், தமிழ்ப் பஞ்சாங்கம், சுப்ரதீபம், கால தீபிகை போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 196-198