ஆளுமை:ஶ்ரீதரன், இராசையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:37, 15 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீதரன், இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஶ்ரீதரன், இராசையா
தந்தை இராசையா
பிறப்பு 1950.01.15
ஊர் வண்ணார்பண்ணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இ.ஶ்ரீதரன் (1950.01.15 - ) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட வில்லிசைக் கலைஞர். இவரது தந்தை இராசையா. வில்லிசை, தெய்வீகச் சொற்பொழிவு, கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல் ஆகிய துறைகளில் ஆற்றலுடன் செயற்படும் இவரின் கவிதை, கட்டுரைகள் ஈழத்தில் வெளிவரும் முன்னணி தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகி வந்துள்ளன.

சைவ சமய தரிசனம், பாலர் தோத்திரத் திரட்டு, நல்லை ஆதீன முதல்வர் நற்சரிதம், மழலைச் செல்வம், மழலைத் தமிழ் இன்பம், மழலைத் தமிழமுதம், வில்லிசைக் கலை ஆகிய நூல்களை இவர் எழுதியும் தொகுத்தும் வெளியிட்டுள்ளார்.ஆன்ம ஈடேற்றம், நற்சிந்தனை, ஆலய வழிபாடு போன்ற சமய சொற்பொழிவுகளை ஆலயங்களில் நிகழ்த்தி வரும் இராசையா ஶ்ரீதரன் அவர்களுக்கு சமய, இலக்கிய, வில்லிசை கலைப்பணிகளுக்காக மக்கள் நிறுவனங்களினால் சைவப்புலவர், கவிமணி, சிவநெறுக் கலாநிதி, மரபுக் கலைச்சுடர், சிவநெறித் தொண்டர் என பல பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் இவரின் கலைப்பணிக்காக 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேசக் கலாசாரப் பேரவை இவரை பாராட்டிக் கௌரவித்து கலைஞானச்சுடர் என்ற விருதினையும் வழங்கியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 118