ஆளுமை:கோதண்டபாணி, விஸ்வலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:28, 12 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கோதண்டபாணி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோதண்டபாணி, விஸ்வலிங்கம்
தந்தை விஸ்வலிங்கம்
பிறப்பு 1920.03.20
இறப்பு 1967
ஊர் இணுவில்
வகை கலைஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வி.கோதண்டபாணி (1920.03.20 - 1967) யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வாழ்விடமாகவும் கொண்ட ஓர் நாதஸ்வரக் கலைஞன். இவரது தந்தை பெயர் விஸ்வலிங்கம். பரம்பரை வழியாக நாதஸ்வரம் இசைப்பதை தொழிலாகக் கொண்ட குடும்பத்தின் வாரிசான இக்கலைஞ்ஞர் தனது ஆரம்பக் கல்வியை கோண்டாவில் இந்துப் பாடசாலையில் கற்று வந்த காலத்தில் தனது மரபுவழிக் கலையான நாதஸ்வர இசையையும் கற்று வரலானார்.

இவர் தனது பெயரில் கோதண்டபாணி நாதஸ்வர இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை இயங்க ஆரம்பித்த போது ஈழநாட்டின் பலபாகங்களிலுமுள்ள இந்து ஆலயங்கள், மங்கள விழாக்கள், பொது விழாக்கள் எனத் தனது நாதஸ்வர இசையை இவர் ஆர்றுகைப்படுத்தி வந்தார். இவரது நாதஸ்வர வாசிப்பானது சுகமும், சுருதி லயமும் நிறைந்த சங்கதிகளை உள்ளடக்கியதாகவே காணப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 79