ஆளுமை:கைலாசபதி, கனகசபாபதி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:22, 9 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கைலாசபதி, க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கைலாசபதி, கனகசபாபதி
தந்தை கனகசபாபதி
பிறப்பு 1933.04.05
இறப்பு 1982.12.06
ஊர் நல்லூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.கைலாசபதி (1933.04.05 - 1982.12.06) மலேசியாவின் கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் கனகசபாபதி. தனது தொடக்க கல்வியை கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்து உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியிலும் தொடர்ந்தார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகம் இளங்கலை (சிறப்பு) பட்டத்தை 1957ஆம் ஆண்டு பெற்றார்.

கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. இவரது நூல்களில் அடியும் முடியும், பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும், தமிழ் நாவல் இலக்கியம், இலக்கியச் சிந்தனைகள், ஒப்பியல் இலக்கியம் போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 65


வெளி இணைப்புக்கள்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF க.கைலாசபதி - தமிழ் விக்கிப்பீடியாவில்]