ஆளுமை:குலரத்தினம், க. சி.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:14, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குலரத்தினம், க. சி.
பிறப்பு 1916.10.10.
இறப்பு 1994.02.06.
ஊர் கந்தர்மடம்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.சி. குலரத்தினம் (1916.10.10 - 1994.02.06) யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலளர். பள்ளிக் காலத்திலேயே எழுத்தாற்றல் மிக்கவராக விளங்கிய இவர் மெற்றிக்குலேசன் பரீட்சையில் சித்திப் பெற்று கொழும்பு மாவட்டக் கச்சேரியில் இரண்டாண்டுகள் எழுதுனராக பணியாற்றினார். பின்னர் 1944ஆம் ஆண்டு தொடக்கம் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று 1944ஆம் ஆண்டு தொடக்கம் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும், கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் கால் நூற்றாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றி தனது ஐம்பதாவது வயதில் ஓய்வுப் பெற்றார்.

மில்க் வைற் செய்தி என்ற சஞ்சிகையின் ஆசிரியராக பணியாற்றி போது இவர் பல தகவல்களை மக்களுக்கு வழங்கினார். இவர் எழுதிய நூல்களில் நோர்த் முதல் கோபல்லாவ வரை என்ற அரசியல் நூலும், இந்து நாகரீகம் என்ற இந்து மதத்தின் வரலாற்றையும் பெருமையும் எடுத்தியம்பும் நூலும், பனை வளம் குறித்து எழுதிய நூலும் குறிப்பிடத்தக்கவையாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 12