ஆளுமை:தம்பித்துரை, ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:08, 28 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:தம்ப்துரை, ஆ., ஆளுமை:தம்பிதுரை, ஆ. என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பிதுரை, ஆ.
பிறப்பு 1932
இறப்பு 1994
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆ.தம்பிதுரை அவர்கள் யாப்பாணத்தைச் சேர்ந்த தொழில்துறை ஓவிய ஆசிரியராவர். மரச் சித்திரங்கள் செதுக்குவதிலும், தேர் கட்டுவதிலும் இவர் சிறந்த புலமை பெற்றவரெனினும், தொழில் முறையில் ஒரு ஓவிய ஆசிரியராக, வித்தியாதரிசியாக கடமையற்றி வருகின்றார். இவரது சிற்பத் திறமைக்காக கலாகேசரி என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

சிறார்களின் கருத்து வெளிப்பாட்டுக்கு கற்பனைச் சித்திரங்களிலும், ஆக்க அலங்காரத்திலும் பயிற்சியளித்தல் வேண்டுமென்பது இவரது அபிப்பிராயமாகும். சித்திரம் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதியுள்ள இவரது ஆக்கங்களில் சிறுவர் சித்திரம், ஓவியக் கலை என்ற இரு நூல்களும் குறிப்பிடத்தக்கவையாகும். மற்றும் யாழ்ப்பாணத்துப் பிற்கால சுவரோவியங்கள் என்ற நூல் எமது பிரதேசத்தின் ஓவிய வரலாற்றில் ஒரு பகுதியை பதிவு செய்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 38-39