ஆளுமை:நடேசு, ஐயாத்துரை
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:59, 27 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நடேசு, ஐயாத்துரை |
பிறப்பு | 1906 |
இறப்பு | 1988 |
ஊர் | |
வகை | ஓவியவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஐயாத்துரை நடேசு அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஓர் ஓவியர். இவர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் 1930-1940வரை ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவரது ஓவியங்கள் அனைத்தும் 1947ஆம் ஆண்டிற்கு முன்னரே படைக்கப்பட்டிருக்க வேண்டும் என ஓவியர் இராசரத்தினம் குறிப்பிடுகின்றார்.
இவர் படைத்த ஏழு ஓவியங்களில் ஐந்து ஓவியங்கள் ரேகைகளால் கட்டுப்படுத்தப்பட்ட வர்ணப் பிரயோகத்தை கொண்டனவாகவும், இரண்டு ஓவியங்கள் திட்டுத் திட்டான வர்ணப் பிரயோகத்தை கொண்டனவாகவும் காணப்படுகின்றன. தற்சமயம் இவரது தாயிருக்கும், நிலைபொருள் ஓவியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 12