நிறுவனம்:யாழ்/ பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் படசாலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:41, 25 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் பலாலி
முகவரி பலாலி வடக்கு, பலாலி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

பாலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசலையானது. யாழ்ப்பாண மாவட்டத்தின் பலாலி வடக்கில் அமைந்துள்ளது. பலாலி கிராமத்து சிறுவர்களின் கல்விக்காக இக் கிராமத்து பிரமுகர்களாகிய கே.ரீ.இராசதுரை, கு.எ.தேவதிரவியம், வ.ஆரோக்கியநதர், அ.பாக்கியநாதர் போன்றோர் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு கடற்றொழில் அமைச்சுக்கு சொந்தமான 3 றூட் 6 பேர்சஸ் விஸ்தீரணமுள்ள காணியைப் பெற்று அங்கு ஒரு பாடசாலைய அமைக்க அனுமதி பெற்றனர். அதன்படி முன்னாள் சபாநாயகர் கௌரவ ஸ்ரான்லி திலகரத்தினம் அவர்களினால் 1971ஆம் ஆண்டு பங்குனி மாதம் 02ஆம் திகதி இப் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

1974ஆம் ஆண்டு தை மாதம் 23ஆம் திகதி யாழ்.ஆயர் வணக்கத்திற்குரிய வ.தியோகுப்பிள்ளை அவர்களின் தலமையின் கீழ் யாழ்.பிராந்திய முன்னாள் கல்விப் பணிப்பாளர் தி.மாணிக்கவாசகர் அவர்களினால் இப் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. அருட்செல்வி மேரி கொஸ்கா அவர்களை அதிபராகவும், எம்.ஜே.பாக்கியநாதர் அவர்களை உதவி ஆசிரியராகவும் கொண்டு 130 பிள்ளைகளுடன் இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 5ஆம் வகுப்பு வரை இருந்த பாடசாலை 1979ஆம் ஆண்டு தொடக்கம் 8ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டு பின்பு படிப்படியாக க.பொ.த. சாதாரணதர வகுப்புக்கள் வரை வளர்ச்சியடைந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 123-124