நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை கட்டுவன்புலம் மகாவித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:57, 25 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ கட்டுவன்புலம் மகா வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் கட்டுவன்புலம்
முகவரி கட்டுவன்புலம், யாழ்ப்பாணம்
தொலைபேசி 0213211367
மின்னஞ்சல்
வலைத்தளம்

கட்டுவன்புலம் மகாவித்தியாலயம் யாழ்ப்பாணத்தின் கட்டுவன்புலம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. பின்தங்கிய மாணவர்களின் நலனை முன்னிட்டு அப் பகுதி மக்களாலும் பொன்னம்பலம் அவர்களின் வழிகாட்டலிலும், எம்.சி.சுப்பிரமணியம் அவர்களின் தலமையிலும் அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் முயற்சியிலும்,அப்போதைய பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் பொன்.கந்தையாவின் உதவியினாலும் 1959ஆம் ஆண்டு 220 மாணவர்களுடனும் ஆறு ஆசிரியர்களுடனும் தற்காலிக கொட்டில் ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டதே இவ் வித்தியாலயமாகும்.

இப் பாடசாலை தென்னிலங்கையில் ஆசிரியராக கடமையற்றி 1958ஆம் ஆண்டு இலங்கையிலேற்ப்பட்ட இனக்கலவரம் காரணமாக பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் திரும்பிய மற்றும் சாதி வெறியினால் யாழ் குடாநாட்டில் ஆசிரிய தொழில் செய்ய முடியாத காரணத்தினால் துன்பமுற்ற ஆசிரியர்களின் சேவையை பெறுவதென தீர்மானிக்கப்பட்டது.

1974ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 1978ஆம் ஆண்டு மாணவர்கள் கா.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றினர். 1980ஆம் ஆண்டுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் இப் பாடசாலையை மகாவித்தியாலயமாக தரமுயர்த்தி கட்டடவசதிகள் நிலச்சுவீகரிப்புக்கான நிலம் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுத்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 119-120