ஆளுமை:தம்பித்துரை, கு. வி.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:07, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தம்பித்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பித்துரை, கு. வி.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கு.வி.தம்பித்துரை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். தன் சொந்த முயற்சியினாலும் அயராத உழைப்பினாலும் முன்னேறிய இப்பெரியார் பொருள் வளத்தால் உயர்வு பெற்ற காலத்திலும் பொருளற்றார் கூட்டுறவைக் கைவிடாது அவர்கள் துயர் தீர்க்க வாரி கொடுத்த வள்ளல் ஆவார்.

அச்சுக்கலையின் புதிய சகாப்தத்தை உருவாக்கியவரும் இவராவார். 1964 - 1968 காலப்பகுதியில் புங்குடுதீவுக் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவராக இருந்து உள்ளூராட்சி அமைச்சர் மு.திருச்செல்வம் அவர்களை வரவழைத்து புங்குடுதீவில் புதிய கிராம முன்னேற்றச் சங்கத்தை நிர்மாணித்த பெருமை இவருக்குண்டு.

இறுபிட்டி பெரியபுலம் விநாயகர் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு அப்பகுதி மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு வழிகாட்டியதோடு இவர் கண்டி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் கலைவாணி புத்தகசாலைகள் மூலம் சிறந்த நூல்களை மக்களுக்கு விநியோத்து அறிவு வளர்ச்சி பெற வழிகாட்டினார். இவ்வாறு பல சமூக சேவைகளை இவர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 264