ஆளுமை:கதிரவேலு, பசுபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:32, 31 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கதிரவேலு பச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரவேலு பசுபதிப்பிள்ளை
தந்தை பசுபதிப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பசுபதிப்பிள்ளை கதிரவேலு அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். வழக்கறிஞரான இவர் சமாதான நீதவானாகவும், பிரசித்த நொத்தாரிஸாகவும், உத்தியோகப்பற்றற்ற நீதவனாகவும் கடமை புரிந்தார்.

புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் இவர் பல சேவைகளை செய்தார். இவருடைய காலத்திலேயே புங்குடுதீவுக்கு மக்கள் வங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவருடைய தந்தையார் பசுபதிப்பிள்ளை விதானையார் உருவாக்கிய ஶ்ரீ கணேச வித்தியாசாலை, ஶ்ரீ பராசக்தி வித்தியாசாலை இலங்கையின் முதல் சமஸ்கிருத பாடசாலையான புங்குடுதீவு வேதாகம பாடசாலை அகியவற்றிற்கு தந்தையாருக்குப் பின் முகாமையாளராக பெரும் பணியாற்றினார். இவர் கல்வி பணி, சமூகப் பணி மட்டுமல்லாது பல சமயப்பணிகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 211-212