ஆளுமை:செல்லத்துரை, கு. வி.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:02, 27 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்துரை, கு. வி.
பிறப்பு
இறப்பு 07.02.1973
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கு.வி.செல்லத்துரை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர் ஆவார். இவர் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம், புங்குடுதீவு மகாவித்தியாலயம் ஆகிய கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றியதோடு அகில இலங்கை தமிழாசிரியர் சங்கத்தின் தலைவராகவும் சேவையாற்றினார்.

புங்குடுதீவு மக்கள் சேவா சங்கத்தின் தலைவராகவிருந்து நயினை அம்பாள் தேர்த் திருவிழாவிற்கு வரும் ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு ஆண்டு தோறும் தண்ணீர் பந்தல் சேவை அளித்து பல சைவப் பணிகளையும் ஆற்றி வந்தார். 1960ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் புங்குடுதீவு கிளைத் தலைவராக கடமையாற்றினார். அத்தோடு இவர் பல அரிய பாடநூல்களை எழுதியதோடு ஞானசுரபி புத்தகக் கம்பனியை நிறுவி அநேக நூல்களை வெளியிட்டார். இவர் தலைச்சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 184