ஆளுமை:சோமஸ்கந்தர், பெரி.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:39, 24 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சோமஸ்கந்தர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமஸ்கந்தர், பெரி.
பிறப்பு
ஊர் உடப்பூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெரி. சோமஸ்கந்தர் அவர்கள் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் தளமாக இருக்கும் உடப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கலைஞர் ஆவார். ஆரம்பகாலங்களில் நகைச்சுவை நடிகனாகவே தன்னை இனம் காட்டி வந்த இவர் 1965 கால பிற்பகுதியில் உடப்பு பிரதேச நாடகக் கலைக்கு உயிரூட்டியவர் ஆவார். நடிகனாக சிறந்த நெறியாளனாக, நாடக ஆசிரியராக, ஒப்பனைக் கலைஞராக, இப்படியாக பலதுறையிலும் தன்னை வளர்த்துக் கொண்டவராவார். இராகலை தமிழர் மகாவித்தியாலத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் ரூக்சைட் தோட்டத்தில் முதல் முதலாக தனது வில்லிசை நிகழ்ச்சியை ஆரம்பித்தவர். அன்றில் இருந்து இன்று வரைக்கும் மகாபாரதம், இராமயணம், முகமது நபி, இயேசு, காந்தி மற்றும் பெரியார்களின் வரலாறு என இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்.

உடப்பின் பாரம்பரிய கலைகளான தெம்மாங்குப் பாடல்களை, பழைய நாடகப் பாடல்களை, கிரமிய சந்தம் கொண்ட இசைப் பாடல்களையெல்லாம் அழிந்துவிடாமல் வருங்காலச் சந்ததியினரும் அறியும் வகையில் பலருக்குக் கற்றுக் கொடுத்தும் வரும் இவர் இன்றளவும் தனது கலைப்பணியைத் தொடர்ந்து வருகின்றார். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளெல்லாம் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கும் இவருக்கு வில்லிசை வித்தகர், வில்லிசை மாமணி என தொடர்ந்து இலங்கை அரசின் கலாபூசணம் விருது வரை பதினைந்துக்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்திருக்கின்றன


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 603-604