ஆளுமை:தியாகராசா, பொன்னையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:35, 13 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னையா தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னையா தியாகராசா
தந்தை ஆறுமுகம் பொன்னையா
தாய் பொன்னம்மா
பிறப்பு 1939.05.26
ஊர் வேலணை
வகை சமூக சேவையாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன் தியாகராசா வேலணை கிழக்கு மூன்றாம் வட்டாரத்தில் தவிடுதின்னி பகுதியில் சிலுகன் என்ற இடத்தில் பிறந்தார். ஆரம்பத்தில் வங்களாவடி சரஸ்வதி பாடசாலையிலும், வேலணை கிழக்கு கலவன் பாடசாலையிலும், மத்திய கல்லூரியிலும் கல்வியை மேற்கொண்டார். இவரது விடா முயற்சி இலட்சிய வெறி வாழ்க்கையில் வாழ்ந்து காட்டனும் என்ற மனோதிடம் அவரைப்பின்னால் கிராமத்தின் சமூக சேவையாளனாகவும், அரசியல்வாதியாகவும், மேடைப்பேச்சாளனாகவும், நாடக நடிகனாகவும், பத்திரிகை எழுத்தாளனாகவும், சமூகம் இவரை பலகோணங்களில் இனம்கண்டு வரவேற்று நிற்கின்றது. 1981ஆம் ஆண்டு ஆடி மாதம் ஒன்பதாம் திகதி கலங்கிய இதயத்துடன் வெளிநாடு புறப்பட்ட இவர் தனது புலம்பெயர் வாழ்க்கையிலும் பெரும் மக்கள் பணி செய்துள்ளார். அதே போல் தாய் மண்ணையும் மக்களையும் மறக்காது நேசித்துக் கொண்டே வாழ்கின்றார். இதற்கு எடுத்துக்காட்டாக இவரது பல கவிதைகள் அமைந்துள்ளன. அத்தோடு புலம்பெயர் வாழ்க்கையிலும் டெனீஸ் தமிழ் தோழமை ஒன்றியம் டென்மார்க், பாராஞ் தமிழர் அமைப்பு பாரிஸ், உலகத் தமிழர் பேரமைப்பு தமிழகம், உலகத் தமிழ் எழுத்தாளர் மன்றம் தமிழகம், டென்மார்க் தமிழ் எழுத்தாளர் பேரவை, சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஜேர்மனி உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகம் மலேசியா போன்ற அமைப்புக்களின் உறுப்பினராகவும் நிர்வாகியாகவும் இருந்து தமிழ்ப்பணி செய்து வருகின்றர். தனது சொந்த வெளியீடாக கவிதை நூல்களையும், பக்தி நூல்களையும், ஒரு தாய் மண் ஆவணத்திரட்டாக அருளமுதம் நூலையும் வெளியீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 532-532