ஆளுமை:முத்துத்தம்பி, பொன்னையா
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:55, 11 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முத்துத்தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | முத்துத்தம்பி பொன்னையா |
தந்தை | சின்னையா |
தாய் | அன்னப்பிள்ளை |
பிறப்பு | 1920.06.30 |
இறப்பு | 1985.02.26 |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னையா முத்துதம்பி (1920 ஜூன், 30) வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் இளவயதில் தந்தையாரை இழந்தமையால் கல்வியை நிறுத்தி தங்களது நிலபுலத்தில் புகையிலைச் செய்கையினை மேற்கொண்டு பின்னர் இதிலிருந்து புகையிலை வியாபாரத்தையும் மேற்கொள்ளலாயினார். காலி மாநகரத்தில் முத்துதம்பி அன் சன்ஸ் என்ற பிரபல புகையிலை வர்த்தக நிலையத்தை ஆரம்பித்து வர்த்தக துறையில் பிரபல்யம் பெற்று விளங்கினார். அதுமட்டுமல்லாது இவர் மிகுந்த சமயப் பற்று உடையவராகவும் காணப்பட்டார். அத்துடன் ஊரில் பல குடும்பங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் குடும்பமாகவும் இவரது குடும்பம் விளங்கியது. கிராமத்தவர்கள் எல்லோரும் இவர்களை மிக்க அன்புடன் முத்தர் குடும்பம் என பெருமையாக அழைத்தனர்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 441-444