ஆளுமை:முத்துத்தம்பி, சின்னையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:50, 11 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முத்துதம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துதம்பி சின்னையா
தந்தை சின்னையா
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு 1912.04.04
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துதம்பி சின்னையா வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். இவர் குடும்ப பொருளதார நிலை காரணமாக தனது பதினெட்டாவது வயதில் கொழும்பு சென்று கொம்பனித் தெருவில் ஒரு நிறுவனத்தில் சாதாரண ஊழியராக தொழில் பார்த்து வந்தார். பின் 1945 ஆம் ஆண்டளவில் கோட்டையில் காகில்ஸ், மில்லர்ஸ் நிறுவனங்களுக்கு அண்மித்ததாக தனக்கு சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஸ்தாபித்தார். சிறு நிறுவனமாயிருப்பினும் பெரும் தொகை வியாபாரம் நடைப்பெற்றமைக்கு அவரது கடின உழைப்பே காரணமாகும். இவர் பெருங்குளம் முத்துமாரியம்மனில் அளவிலாப் பக்தி கொண்டவர் ஆவார். அம்பாளுக்கு பட்டுக்குடை, சாமரை, வெள்ளித்திருவாசி, கயிலாய வாகனம் என்பவற்றை அளித்து பல சமய சேவைகளையும் செய்துள்ளார் என்பதுவும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 438-440