நிறுவனம்:யாழ்/ அளவெட்டி கும்பழாவளை விநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:27, 15 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Thapiththa பயனரால் நிறுவனம்:கும்பலாவலை விநாயகர் கோவில், [[நிறுவனம்:யாழ்/ அளவெட்டி கும்பழாவளை விநாய...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அளவெட்டி கும்பழாவளை விநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அளவெட்டி
முகவரி அளவெட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அளவெட்டி கும்பழாவளை விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். மாருதப்புரவீகவல்லி எனும் பெயருடைய சோழ அரசிளங்குமரி குதிரை முகம் நீங்கி பிரதிஷ்டை செய்த ஏழு ஸ்தலங்களில் மத்தியஸ்தலமே கும்பழாவளை. இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லியின் வருகைக்கு முன்பே இருந்தது என்பது ஐதீகம். 1811 ஆம் ஆண்டளவில் கும்பழாவளையில் ஆலயக் கர்ப்பக்கிரகமும் மகாமண்டபமும் கட்டப்பெற்றன. 1847 ஆம் ஆண்டு எழுதப்பட்ட தோம்பில் இவ்வாலயமூலஸ்தாபனம் கற்களால் கட்டப்பட்டு ஓலையால் வேயப்பட்டது என கூறப்பட்டுள்ளது.