ஆளுமை:ஞானேந்திரன், ஏ. ஜே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானேந்திரன், ஏ. ஜே.
பிறப்பு 1951.01.05
ஊர் ஊர்காவற்துறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஏ.ஜே. ஞானேந்திரன் (1951.01.05) ஓர் ஊடகவியலாளர் ஆவார். தாயகத்தில் காவலூரை(ஊர்காவற்துறை) சேர்ந்த இவர் அதே ஊரில் உள்ள புனித அந்தோணியார் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவர் நோர்வே நாட்டு நிறுவனமான சிநோரில் பிரதம களஞ்சியப்பொறுப்பாளராகக் கடமையாற்றியது மட்டுமன்றி, ஆங்கில பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாறினார். இவர் ஜேர்மனியிலிருந்து வெளிவந்த 'இளைஞன்' என்ற மாதாந்த சஞ்சிகையின் உதவி ஆசிரியராக கடமையாற்றியவர். அத்தோடு ஜேர்மனியில் இருந்து வெளியாகும் பூவரசு, மண், வெற்றிமணி போன்ற சஞ்சிகைகளிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் பயணக்கட்டுரைகளான சென்றேன் - பார்த்தேன் - வந்தேன் என்ற இலங்கைப் பயணத்தின் தொடர் கட்டுரையையும் எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 387-389


வெளி இணைப்புக்கள்