உதவி:வழிமாற்றுப் பக்கம்
ஒரு குறிப்பிட்ட பக்கத்தை இன்னொரு பக்கத்துக்கு இட்டுச்செல்வதே வழிமாற்றுப்பக்கம் ஆகும். ஒரு பக்கம் பல்வேறு பெயர்களால் குறிக்கப்படும் நிலையில், அவற்றை தேடும்நிலையில் நேரடியாக அப்பக்கத்திற்கே இட்டுச்செல்லும்.
உதாரணமாக, கர்மம் என்னும் ஒரு பக்கம் நிலையில், இதையே கர்மா(தவறானது) , கர்மவினை என பலவாறாக பரவலாக அறியப்பட்டிருக்கலாம், ஆகவே இந்தத்தலைப்புகளில் தேடுவோரை கர்மம் என்ற சரியான தலைப்புக்கு இட்டுசெல்ல வழிமாற்றுப்பக்கங்கள் உதவுகிறது.
ஆகவே ஒரு குறிப்பிட்ட தலைப்பை பல்வேறு தலைப்புகளில் தேடப்படும் நிலையில் அவற்றை சரியாக பக்கத்த்துக்கு திசைமாற்றம் செய்பவையே வழிமாற்றுப்பக்கங்கள் ஆகும். மேலும் வெவ்வேறு சொற்கோர்வைகள், பர்வலான எழுத்துப்பிழைகள், வல்லொற்றுப்பிழைகள் ஆகியவற்றும் வழிமாற்றுப்பக்கங்களை உருவாக்கலாம்
வழிமாற்றுப்பக்கங்கள்
வழிமாற்றுப்பக்கங்களை உருவாக்க, எந்த பக்கத்தை வழிமாற்ற விரும்புகிறோமோ அந்த பக்கத்தை இயற்றும் தொகுத்தல் பெட்டிக்கு சென்று #REDIRECT[[ ]] எனும் உரைக்கோர்வையில் அடைப்புக்குறிக்குல் வழிமாற்றவேண்டிய பக்கத்தை இடவேண்டும். இதற்கு தொகுத்தல் பெட்டியில் மேலுள்ள பொத்தான்களையோ அல்லது கீழே உள்ள விக்கிக்கோர்வை பெட்டியையோ கூட குறுக்கவழியாக பயன்படுத்தலாம்.
மேலுள்ள, உதாரணத்தின் கர்மவினை என்னும் பக்கத்தை கர்மம் என்னும் பக்கத்துக்கு திசைமாற்றம் செய்ய விரும்பினால், கர்மவினை என்னும் பக்கத்தை இயற்றி, தொகுத்தல் பெட்டியில் #REDIRECT[[கர்மம்]] என இட்டால், கர்மவினை என்னும் தலைப்பில் தேடுவோர் அனைவரும் கர்மம் என்னும் பக்கத்துக்கு இட்டுச்செல்லும்
உதாரணாமக் இப்பக்கத்துக்கே, உதவி:வழிமாற்றுப்பக்கம், உதவி:வழிமாற்று பக்கம் என வழிமாற்றுப்பக்கங்கள் உள்ளன.
உருவாக்கப்பட்டுள்ள வழிமாற்றுப்பக்கங்களை வழிமாற்றிகளின் பட்டியல் என்னும் சிறப்புப்பக்கத்தில் காணலாம்.
இரட்டை வழிமாற்றிகள்
ஒரு பக்கத்தை ஒரு முறை மட்டும் தான் வழிமாற்றும் போது தான் இயங்கும். ஒரு வழிமாற்றுப்பக்கத்தை இன்னொரு வழிமாற்றும் பக்கத்துக்கு வழிமாற்றும் போது, அந்த வழிமாற்றி இயங்காது.
உதாரணாமக், கர்மவினை கர்மாவிற்கு வழிமாற்றப்பட்டு, கர்மா கர்மம் பக்கத்துக்கு வழிமாற்றப்பட்டிருந்தால்,
கர்மவினை --> கர்மா --> கர்மம் என்றவாறாக வழிமாற்றம் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் கர்மவினை, கர்மம் பக்கத்துக்கு தானியங்கியாக இட்டுச்செல்லாமல் கர்மம் பக்கத்துக்கு இணைப்பை காட்டும்.
ஆகவே, வழிமாற்றுப்பக்கங்களை தவிர்க்க வேண்டும்.
பொதுவாக பக்கங்களை நகர்த்தும் போது இதுபோன்ற வழிமாற்றங்கள் உருவாக்கப்படும்.
தவறுதால இயற்றப்பட்டுள்ள வழிமாற்றுக்கங்களை காண இரட்டை வழிமாற்றுகள் பக்கத்தை காணவும்