ஈழத்துச் சிறுகதை வரலாறு
ஈழத்துச் சிறுகதை வரலாறு | |
---|---|
நூலக எண் | 300 |
ஆசிரியர் | செங்கை ஆழியான் |
நூல் வகை | இலக்கிய வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வரதர் வெளியீடு |
வெளியீட்டாண்டு | 2001 |
பக்கங்கள் | xii + 300 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
ஈழத்துச் சிறுகதைகள் சரியான வடிவமைப்பில் எழுதத்தொடங்கிய 1930 களின் பிற்பகுதியிலிருந்து 2001ம் ஆண்டு வரை வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த 800 வரையிலான சிறுகதைகளையும் வாசித்து, சுமார் 274 சிறுகதைத் தொகுதிகளையும் 400 சிறுகதைப் படைப்பாளிகளையும் கணிப்பீடு செய்து ஒரு பாரிய நூலை ஈழத்துச் சிறுகதை வரலாற்றுக்குத் தந்திருக்கிறார். சமுதாய சீர்திருத்தக்காலம் (1930-49), முற்போக்குக்காலம் (1950-60), புத்தெழுச்சிக்காலம் (1961-83), தமிழ்த் தேசிய உணர்வுக்காலம் (1983- ) என நான்கு பெரும்பிரிவாக வகுத்து சிறுகதைகளை நூலாசிரியர் மதிப்பீடு செய்துள்ளார். 2001வரை ஈழத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளின் பெயர்கள் ஆண்டுவாரியாகப் பட்டியலிட்டு பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது. மூதறிஞர் தி.ச.வரதராஜன் (வரதர்) அவர்களின் பவளவிழா நினைவாக வெளிவந்துள்ளது.
பதிப்பு விபரம்
ஈழத்துச் சிறுகதை வரலாறு. செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226 காங்கேசன்துறை வீதி).
xii + 300 பக்கம், விலை: ரூபா 300. அளவு: 21 *15 சமீ.
-நூல் தேட்டம் (# 1775)