ஆளுமை:வைகுந்தம், கணேசபிள்ளை

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:07, 22 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைகுந்தம், கணேசபிள்ளை
தந்தை -
தாய் -
பிறப்பு 1939.04.17
இறப்பு -
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைகுந்தம், கணேசபிள்ளை (1939.04.17) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது கலைப்பணி 1965 ஆம் ஆண்டு ஆத்மஜோதிப் பத்திரிகைக்குக் கட்டுரைகள் எழுதியன் மூலம் ஆரம்பமானது. இணுவில் இந்துக் கல்லூரியில் கல்விகற்ற இவர் பண்டிதையாக பயிற்றப்பட்ட ஆசிரியராக மலையகம், யாழ் மண்டைதீவு மகா வித்தியாலயம், யாழ் இராமநாதன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றியுள்ளார்.சாந்தி சமாதானம், வந்தது வசந்தம், சூரன் போர் போன்ற இவர் எழுதிய நாட்டிய நாடகங்கள் வலய, மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது. இவற்றை விட பஞ்சபூதங்களும் மனித வாழ்க்கையும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றது. மேலும் அரிச்சந்திர மயானகாண்டம், கண்ணகி, கற்பு, நாமர்க்கும் குடியெல்லாம், பாஞ்சாலி சபதம், பரதன் பாதுகை பெறல், கர்ணன், பஞ்சபூதங்கள், ஜடாயுவின் மோட்சம், செய்நன்றி மறவாமை போன்ற நாட்டிய நாடகங்களும் இவரால் எழுதப்பட்டவையாகும். இவற்றை விட 12 பிரபந்தங்கள் பாடியுள்ளார். மேலும் பிள்ளை தமிழ், பள்ளி எழுச்சி, திருவூஞ்சல் என்பவற்றையும் பாடியுள்ளார். இவரால் எழுதப்பட்ட நாட்டிய நாடகங்கள் தொகுக்கப்பட்டு நூலுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவூஞ்சல் பாமாலைகள், திருப்பள்ளியெழுச்சி பாப்பாவுக்கு அபிநயப் பாடல்கள் என்பனவும் இவரால் எழுதப்பட்டவையாகும்.

பல்வேறுபட்ட இலக்கியப் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கும் இவர் இன்றும் இணுவை ஶ்ரீ பரராசசேகரப்பிள்ளையார் கோயில் திருநெறிய தமிழ் மறைக்கழகத்தின் பொறுப்பாசிரியராக திகழ்ந்து அவற்றை சிறந்த முறையில் நடத்தி வருவதோடு கலைக்கழகத்தினையும் உருவாக்கி நடத்தி வருகின்றார். 2009ஆம் ஆண்டு இவரால் கலை இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிக்காக திருமறைக்கலாமன்றம் இவரைப் பாராட்டி கௌரவித்தது. அத்துடன் 2011ஆம் ஆண்டு கொழும்பு கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாபூஷண விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 64150 பக்கங்கள் 10
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 51