ஆளுமை:ருக்மனிதேவி

நூலகம் இல் இருந்து
Tharsiga (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:52, 15 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ருக்மணி தேவி
தந்தை ஜோன். டி. டானியல்
தாய் ஹெலன்ரோஸ்
பிறப்பு 1923.01.15
இறப்பு 1978.10.28
ஊர் நுவரேலியா
வகை நடிகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
RUKMANIDEVI.jpg

ருக்மணி தேவி (1923.01.15 - 1978.10.28) நுவரெலியா, றம்பொடையைச் சேர்ந்த திரைப்பட நடிகை, பாடகி. இவரது தந்தை ஜோன். டி. டானியல்; தாய் ஹெலன்ரோஸ் .

இவரின் இயற்பெயர் டெய்சி இராசம்மா. டெய்சி தனது ஆரம்பப் படிப்பை கொழும்பு புனித மத்தியூ பாடசாலையிலும், பின்னர் வெள்ளவத்தை புனித கிளேயர் பாடசாலையிலும் பயின்றார். தனது 13 வது வயதிலே பள்ளி மேடை நாடங்களில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். இதன் மூலம் இசைத் தொகுப்பிற்குப் பாடும் வாய்ப்பையும், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். 1947 ல் வெளிவந்த முதல் சிங்கள திரைப்படமான கடவுன பொறந்துவவில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கி 84 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். இவற்றில் சில தமிழ் திரைப்படங்களும் அடங்கும். நான் உங்கள் தோழன் படத்தில் வி. பி. கணேசனுக்குத் தாயாகவும், காத்திருப்பேன் உனக்காக படத்தில் கதாநாயகி கீதாஞ்சலிக்குத் தாயாகவும் இவர் நடித்துள்ளார். பி. ஏ. டபிள்யூ. ஜெயமன்னா எனும் திரைப்படத் தயாரிப்பாளரை 1943 பெப்ரவரி 18 இல் திருமணம் செய்தார். 1978 ம் ஆண்டு அக்டோபர் 28 இல் துடெல்ல என்னுமிடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்தார். சிங்கள படமான "அஹசின் போலவாடா " வில் பாடியதே அவரது கடைசி பாடலாகும் .இந்த திரைப்படம் 1978 இல் நடைபெற்ற உலக கெய்ரோ பிலிம் விழாவில் அக்னெட் விருதை பெற்றது .ஸ்ரீ லங்காவின் ப்ரெசிடெண்ட் பரிசளிப்பு விழாவிலும் இப்படம் விருதை சூடியது . இதில் இவர் பாடிய "தொய் தொய்யா புத்த தொய் தொய் " பாடலுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது . ஆனால் இப்பரிசை பெற அவர் அப்போது உயிருடன் இல்லை . அவரது கணவர் எட்டி ஜெயமண்ணா விடம் அப்பரிசு கையளிக்கப் பட்டது இவர் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலை இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இவர் வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாகப் பராமரிக்கப்படுகிறது.  

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ருக்மனிதேவி&oldid=546594" இருந்து மீள்விக்கப்பட்டது