ஆளுமை:தணிகாசலம், கந்தையா
பெயர் | தணிகாசலம் |
தந்தை | கந்தையா |
பிறப்பு | 1946.09.28 |
ஊர் | அச்சுவேலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தணிகாசலம், கந்தையா (1946.09.28) யாழ்ப்பாணம், அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை பெயர் கந்தையா. இவர் யாழ்.பரமேஸ்வராக் கல்லூரியில் சிரேஸ்ட தராதரம் வரை பயின்று தனது பதினெட்டாவது வயதில் இலக்கிய உலகில் கால்பதித்தார். இவர் சிறுகதைகள், கவிதைகளைப் பத்திரிகைகளில் எழுதுவதுடன் 1974 ஆம் ஆண்டிலிருந்து தேசிய கலை இலக்கியப் பேரவையின் இணைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் ”தாயகம்” என்னும் ஈழத்துச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார்.
இவர் ”கணிகையன்” என்ற புனைபெயரில் வேலிகள், அகதி, நாய்களோ, பிரம்படி முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவரது ”பிரம்படி” என்னும் சிறுகதைத்தொகுதி 1988 ஆம் ஆண்டு சென்னை புக்ஸ் சென்ரரின் வெளியீடாக வெளிவந்ததுடன் ”கதை முடியுமா” என்னும் சிறுகதைத் தொகுதி 1995 ஆம் ஆண்டு சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் சென்ரரின் வெளியீடாகவும் பிரசுரமானது. மேலும் இவரது கவிதைத் தொகுப்பு நூல் 2002 ஆம் ஆண்டு தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக வெளிவந்தது.
தனது கிராமமான இருபாலையிலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் சமத்துவத்துக்கும் சனசமூக நிலையத்தில் சரிநிகர அந்தஸ்த்துக்குமாக போராடி வெற்றி கண்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 58